ETV Bharat / bharat

Kurichu Dam: பூடானின் குரிஷு அணையில் இருந்து நீர் திறப்பு - அசாம் முதலமைச்சர் எச்சரிக்கை - பூடானின் குரிஷூ அணை

பூடானின் குரிஷூ அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் அசாமில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அம்மாநில முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Bhutan release Excess water from Kurichu Dam assam on alert

author img

By

Published : Jul 15, 2023, 10:45 AM IST

கவுகாத்தி (அசாம்): அண்டை நாடான பூடானின் குரிஷூ அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், அசாமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொடர்ந்து நிலைமை மோசமடைந்து வருகிறது. இதனால், அசாம் மாநிலத்தின் பல மாவட்டங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரிஷூ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து பூடான் அரசு அசாம் அரசுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குரிஷு அணையின் நீர்மட்டம், அசாமில் உள்ள பார்பெட்டா, பாங்கைகான் மற்றும் நல்பாரி மாவட்டங்களை பாதிக்கும் அளவுக்கு உள்ளது. முன்னறிவிப்பு இன்றி திறக்கப்படும் பூடானில் இருந்து வரும் குரிஷூ அணை மற்றும் ஓட்ஜெர் நதி நீர் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலத்தில் இந்த மாவட்டங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூலை 13) தண்ணீர் திறப்பதாக குரிஷூ அணை அதிகாரிகள் அறிவித்தனர். அணையை இயக்கும் ட்ருக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (Druk Green Power Corporation Limited) நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் நீர்த்தேக்கத்தில் உபரிநீர் திறந்து விடப்பட்டு காலை 9 மணிக்கு தண்ணீர் நிறுத்தப்படும் என அறிவித்து இருந்தது.

  • This morning, the Kurichu dam authority started releasing excess water. The excess water is being carefully redirected through the gates to control the flow. According to reports, the weather in the upstream of the plant has improved since yesterday. Therefore the amount of water… pic.twitter.com/vpPWFLgfoY

    — Himanta Biswa Sarma (@himantabiswa) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, குரிஷு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அவரது ட்விட்டர் பதிவில், “இன்று காலை குரிஷூ அணை ஆணையம் உபரி நீரை வெளியேற்றத் தொடங்கி உள்ளது.

அணைக்கு வரும் நீரோட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் உபரி நீர் கவனமாக கதவுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. நேற்று வானிலை சீரடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவு பெரிதாக இருக்காது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என பதிவிட்டிருந்தார்.

அசாமின் 19 வருவாய் வட்டங்களில் தற்போது 179 கிராமங்கள் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அசாம் முழுவதும் வெள்ளத்தால் 2,211.99 ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்தன. சிராங் மாவட்டத்தில் 14,328 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனாவின் முக்கிய துணை நதியான குரிஷூ ஆறு பூடானின் முங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நதி திபெத்தில் இருந்து பாய்கிறது. அங்கு லோஷாக் நுப் கு என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: Cheetah: மீண்டும் ஒரு சிவிங்கிப் புலி இறப்பு - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.