டி-சீரிஸ் தலைவரும், தயாரிப்பாளருமான பூஷன் குமார் தனது சமீபத்திய திரைப்படமான 'பூல் புலையா 2'இன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தொடர்ந்து, திரைப்படத்தில் நடித்த பூஷன் கார்த்திக்கிற்கு ரூ. 3.73 கோடி மதிப்புள்ள புதிய காரைப் பரிசாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் கார்த்திக் ஆர்யன், தயாரிப்பாளர் பூஷன் மற்றும் அவர் பரிசாக அளித்த சொகுசு காருடன் உள்ள படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, இந்தியாவின் முதல் ஆரஞ்சு நிற மெக்லாரன் ஜிடி கார் எனவும், அடுத்ததாக தனக்கு ஒரு பிரைவேட் ஜெட் பரிசளிக்க வேண்டும் எனவும் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷேஜாதா திரைப்படத்திற்காக, நடிகர் கார்த்திக் ஆர்யன், பூஷன் குமாருடன் மீண்டும் இணைவதற்குத் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இன்று முதல் திரையரங்குகளில் அசோக் செல்வனின் 'வேழம்'..!