நாட்டில் கரோனா மருத்துவம் பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீவிர கரோனா பாதிப்பில் உள்ளவர்களுக்குச் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை, பலரும் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேமித்துவைக்கப்பட்டிருந்த 800 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் திருடுபோயுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறை, சிசிடிவி காட்சியை ஆய்வுசெய்து வருகின்றனர். மருத்துவமனையிலிருந்த ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்களைத் திருடிச்சென்றது யார் என்பது குறித்தும் மருத்துவமனை ஊழியர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
முன்னதாக, இந்தூரில் ரெம்டெசிவிர் மருந்தை 22 ஆயிரம் ரூபாய்க்குத் திருட்டுத்தனமாக விற்க முயன்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் தீ விபத்து: 5 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு!