ETV Bharat / bharat

போஜ்புரி நடிகையிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை - உத்தரப்பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் போஜ்புரி நடிகை தங்கியிருந்த அறையில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

போஜ்புரி நடிகையிடம் இருந்து 15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

author img

By

Published : Nov 25, 2022, 9:26 PM IST

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த போஜ்புரி நடிகை அம்ரபாலி துபேயின் தங்க நகைகள் மற்றும் மூன்று செல்போன்கள் அவரது ஹோட்டல் அறையில் இருந்து திருடப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். நடிகை துபே தனது வரவிருக்கும் திரைப்படமான விவாஹ் 3 படப்பிடிப்பிற்காக பெற்றோருடன் நவம்பர் 17ஆம் தேதி அயோத்திக்கு சென்றிருந்தார். அங்கு பெற்றோருடன் ஹோட்டல் ஒன்றில் தங்கினார். அங்கு தான் திருட்டு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து நடிகையின் தாயார் உஷா ஷைலேஷ் துபே கூறுகையில், அறைக் கதவைப் பூட்ட மறந்துவிட்டு தூங்கிவிட்டோம். காலை 9 மணியளவில் கண்விழித்த போது தான் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. அறையில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை இவர்களது அறைக்குள் சில அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்டது தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகர் ஆர்.கே. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 150 சவரன் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.