இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், அவ்வப்போது நரேந்திரமோடி குறித்து தெரிவித்த கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தானாகவே இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியாவில் தற்போது வசித்துவருகிறார். இந்தியாவில் தேடப்படும் நபராகவும் அவர்அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜாகிர் நாயக்கை விரைவில் இந்தியா கைது செய்து சிறையில் அடைக்கும் என பாஜகவின் செய்தித் தொடர்பாளர் விஜய் சோங்கர் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில், “இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்துவரும் ஜாகிர் நாயக்கை விரைவில் கைது செய்து சிறையில் அடைப்போம். சிறைதான் அவருக்கான சரியான இடம்.
முஸ்லீம் நாட்டில் அமர்ந்துகொண்டு இந்தியாவை அவதூறாகப் பேசுவது அவரது தொழில். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை அவர் தவறாக வழிநடத்துகிறார். முஸ்லீம் நாடுகளும் அவரது சுயரூபத்தை புரிந்துகொண்டன” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பணம் பறித்தல் புகார்: பாஜக எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் சரண்!