பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை அளிக்கும் வகையில் திஷா சட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்துள்ளார்.
இச்சட்டத்தற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ராக்கி கயிறு கட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த சட்டத்தின்படி பெண்களுக்கெதிரான குற்றத்தில் ஈடுபட்டால் 14 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, 21 நாட்களுக்குள் தண்டனை அறிவிக்கப்படும்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வல்லூறவுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் நினைவாக, மற்ற பெண்களை காக்கும் வகையில் இந்த திஷா சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திஷா என்கவுன்டர் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை.!