இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் சுகுமார் சென்-ஐ பெருமைப்படுத்தும் விதமாக ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. இதில் சிறப்பு விருத்தினராகக் குடியரசு முன்னாள் தலைவர் பிராணப் முகர்ஜி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பின்னர் விழாவில் பேசிய முகர்ஜி, “இந்திய ஜனநாயகம் மீண்டும் மீண்டும் சோதிக்கப்பட்டுவருகிறது. தற்போது மக்கள் முக்கிய பிரச்னைக்களுக்காக வீதியில் வந்து குரல் கொடுக்கின்றனர். அதில் அதிகமாக இளம் குரல்களை கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், “இந்திய ஜனநாயகத்தின் நடைமுறையில், தேர்தல் ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க...இந்துத்துவ கொள்கையை ஒருபோதும் கைவிட்டதில்லை - சிவசேனா