ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் சிவகுமார். நேற்று மாலை நேரத்தில் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனது நண்பர்களை ஏமாற்றுவதற்காக கழுத்தில் சுருக்கு மாட்டிக்கொண்டு தூக்கில் தொங்குவதை போல் நடித்தார். அவரது நண்பர்களும் அவரை கிண்டல் செய்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மதுபோதையில் இருந்த சிவக்குமார், தனது கழுத்தில் மாட்டிய சுருக்கு எதிர்பாராத விதமாக இறுகியது.
வீடியோ காலில் இருந்த அவரது நண்பர்கள் சிவக்குமார் விளையாட்டாக செய்வதாக நினைத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் சிவக்குமார் நிலை தள்ளாடி உயிரிழந்தார். இதையடுத்து, தகவல் அறிந்து வந்த திருச்சனூர் காவல்துறையினர் தூக்கில் தொங்கியபடி இறந்துபோன சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விளையாட்டாக தனது நண்பர்களை ஏமாற்ற தூக்கில் தொங்கியது போல் நடிக்க முயன்று இறந்துபோன சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.