இதுகுறித்து நேரடி வரிகளுக்கான மத்திய ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “ கோவிட்-19 பரவலைத் தடுக்க மத்திய அரசு விதித்துள்ள ஊரடங்கு காரணமாக இந்தியாவில் தங்கியிருக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகி இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்த சலுகை அளிக்கப்படும்.
மார்ச் 22 ஆம் தேதிக்கும், முன்னதாக இந்தியா வந்து மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னர் திரும்ப முடியாமல் போன வெளிநாடு வாழ் இந்தியர்களும் (என்.ஆர்.ஐ) இதில் அடங்குவர். அவர்கள் இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருப்பது கணக்கிடப்படாது என்று நிதியமைச்சகம் அறிவித்தது.
எனவே, இந்திய குடியிருப்பாளர்களுக்கான வரிவிதிப்புகளை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என, ஊரடங்கின் காரணமாக இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவலைப்பட தேவையில்லை. வருமான வரிச் சட்டத்தின் 6ஆவது பிரிவின் கீழ், அவர்கள் 2019-2020 நிதியாண்டுக்கான வரிக்கணக்கை இந்திய அரசுக்குக் காட்ட வேண்டியதில்லை.
2020-2021 நிதியாண்டில் ஊரடங்கு தொடர்கிறது. சர்வதேச விமானங்கள் எப்போது மீண்டும் செயல்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், இந்த நபர்களின் குடியிருப்பை நிர்ணயிப்பதற்கான இறுதி சுற்றறிக்கை, நீட்டிக்கப்பட்டவர்களின் தங்குமிடத்தைத் தவிர்த்து முறையாக பதிவிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : 'புத்த பூர்ணிமாவில் வீடு திரும்புவதற்கு பெருமைப்படுங்கள்'