மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர்-கோரடி சாலையில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நாக்பூர்-கோரடி சாலையில் தரகர் மூலமாகப் பாலியல் தேவைக்குக் கேட்பதுபோல் கேட்டு காவலர் ஒருவர், விஜயானந்த் சொசைட்டியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தது காவல் துறையினர், அந்த வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர், பாலியல் தொழிலில் ஈடுபட்ட இளம்பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இது குறித்து அவர்களிடம் விசாரிக்கையில், ஒரு பெண் குஜராத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். ஊரடங்கு காரணமாக வேலையிழந்த அந்தப் பெண், ஏப்ரல் முதல் வாரத்தில் நாக்பூருக்குத் திரும்பியுள்ளார்.
மற்றொரு பெண் நாக்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்துவந்துள்ளார். பின்னர் ஊரடங்கால் அவரும் வேலையிழந்துள்ளார். இதனால் வேலையிழந்த இருவரும் தங்களது குடும்ப வறுமையைப் போக்க பாலியல் தொழிலுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க...மருத்துவப் பணியாளர்களுக்கு உதவ ரோபோ: திரிபுரா உதவிப் பேராசிரியர் அசத்தல்