ETV Bharat / bharat

வறட்சியை வென்றெடுத்த பட்டதாரி பெண்... புதிய யுக்தியால் லட்சக்கணக்கில் வருமானம்! - ரசாயண உரங்கள்

பெங்களூரு: சித்ரதுர்காவில் ஐடி வேலையை வேண்டாம் என உதறிய இளம்பெண் ஒருவர், ஆர்கானிக் ஃபார்மிங் மூலம் 33 வகையான காய்கறிகளை விளைவித்து சாதனை படைத்துள்ளார்

பெங்களூரு
பெங்களூரு
author img

By

Published : Jan 28, 2021, 8:59 AM IST

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் டோனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ரோஜா ரெட்டி, பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஊரடங்கு சமயத்தில் வீட்டிற்கு வந்த ரோஜா, தனது தந்தையுடன் இணைந்து ஆர்கானிக் ஃபார்மிங்கில் ஈடுபட முடிவு செய்தார். நிரந்திர வேலையை விட்டுட்டு, தண்ணீர் பஞ்சம் உள்ள பகுதியில் எப்படி விவசாயம் செய்ய முடியும் என பெற்றோர் குழப்பத்தில் இருந்தனர். இருப்பினும், பெற்றோரை சமாதானம் செய்து இயற்கை விவசாயத்தை கையில் எடுத்தார் ரோஜா. தற்போது, ஆறு ஏக்கர் நிலத்தில் 35 வகையான காய்கறிகளை விளைவித்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

ஆர்கானிக் ஃபார்மிங்

கல்லூரி பருவம் முதலே ஆர்கானிக் ஃபார்மிங்கில் அதிக நாட்டம் கொண்ட அவர், பெற்றோரின் வற்புறுத்தலாம் மட்டுமே ஐடி வேலைக்கு சென்றார். கிடைக்கும் நேரங்களில் இயற்கை விவசாயத்தை குறித்து கற்றுக்கொண்டதால், கர்நாடகாவின் பெலகாவி பகுதிகளிலிருந்து காய்கறி விதைகளை கொண்டு வந்து விளைவித்து, தினம்தோறும் 10 ஆயிரம் சம்பாதித்து வருகிறார்.

வறட்சியை வென்றெடுத்த ரோஜா

வறட்சி நிறைந்த அப்பகுதியில், கிணறு ஒன்றை தோண்டி, சொட்டு நீர் பாசனம் மூலம் விளைநிலத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தார். கரிம உரங்களைப் பயன்படுத்தும் ரோஜா, இந்திய , வெளிநாட்டு காய்கறிகள், மலர்களை விளைவித்து வருகிறார்.

ஆன்லைன் விற்பனை:

விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்ய ஆன்லைன் செயலி ஒன்றை தொடங்கினார். அதன் மூலம், பெங்களூரு, உதபி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு கரிம காய்கறிகளை விற்பனை செய்கிறார். இதுமட்டுமின்றி, விவசாயிகளுக்கு கரிம வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ரசாயண உரங்களால் உடலுக்கு ஏற்படும் தீங்கை அறிந்துக்கொண்ட அவர், கரிம பண்ணை தயாரிப்புகளை வழங்குவதற்கும், அதன் ஆரோக்கியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவும், புதிதாக ஆன்லைன் ஆர்கானிக் மார்கெட்டிங் நிறுவனத்தை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த பொறியியல் பட்டதாரி, இளம் விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.