இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளரான சம்பித் பட்ரா, "சீனாவுடன் நடந்த மோதல் குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் நிலையில், ராகுல் காந்தி ஏன் பாஜக அரசை விமர்சிக்க வேண்டும்?
1996ஆம் ஆண்டு தேவகௌடா பிரதமராக இருந்தபோது இந்திய-சீன எல்லையின் இரண்டு கிலோமீட்டர் தொலைவுவரை இரு நாடுகளின் படைகள் ஆயுதங்களைப் பயன்படுத்துக் கூடாது என ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுபற்றி தெரியாமல் ராகுல் காந்தி, அவர் சொந்த நாட்டிற்கு எதிராகப் பேசுவது சரியல்ல.
மேலும் தேவையில்லாத பரப்புரையில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதனால் அவர் மிகவும் பொறுப்பற்ற அரசியல் தலைவர் என்பதை நாடு தற்போது கண்டறிந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஆயுதமின்றி இந்திய வீரர்களை அனுப்பியது ஏன்? ராகுல் காந்தி கேள்வி