இந்த இட மாற்றும் சடங்கில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச அரசின் தகவலின்படி, மார்ச் 24 ஆம் தேதியன்று பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று முடியும்வரை ராம் லல்லா சிலை வைப்பதற்கென சிறப்பாக கட்டப்பட்ட மனஸ் பவனில் ராம் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் பங்கேற்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மார்ச் 24ஆம் தேதி மாலை அயோத்தி வந்தடைவார். அதனைத் தொடர்ந்து, அயோத்தி ராமர் ஜென்ம பூமியில் இருந்து ராம் லல்லா சிலையை எடுத்துக்கொண்டு மனஸ் பவன் நோக்கி செல்லும் ஊர்வலத்தில் கலந்துகொள்வார்.
மேலும், புதிய வழிபாட்டு தளத்தில் ராம் லல்லா சிலையை நிறுவும் 'பிரண்-பிரதிஷ்டா' வைபவத்திலும் சாதுக்கள், ராம பக்தர்களுடன் அவரும் பங்கேற்பார் என அறிய முடிகிறது.
இந்த கோயில் மார்ச் 25ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: கர்நாடகாவில் மால், தியேட்டர் ஒரு வாரம் மூட உத்தரவு!