உத்தரப் பிரதேசத்தில் ராமஜென்ம பூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்காக மத்திய அரசு மேற்பார்வையில் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்ட அதன் அறங்காவலராக மூத்த வழக்குரைஞர் பராசரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அங்கு பிரமாண்டமான கோயிலைக் கட்டுவதற்கான ஏற்படுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதன் முக்கியச் சடங்காக பிரான பிரதிஷ்டை செய்யும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 25ஆம் தேதி இந்தச் சடங்கு மேற்கொள்ளப்பட்டு சிலை நிறுவும் பணி நடைபெறவுள்ளது.
இதற்காக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரும் மார்ச் 24ஆம் தேதி அயோத்தி செல்லவுள்ளார். அங்குள்ள அறக்கட்டளை குழுவினருடன் பேசும் யோகி, அடுத்தநாள் நடைபெறும் நிகழ்வை தலைமையேற்று நடத்திவைக்கிறார்.
முதலமைச்சரின் வருகையையெட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையும் அங்கு தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கி வைப்புகளுக்கு அச்சுறுத்தல் இல்லை