மும்பை (மகாராஷ்டிரா): மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஆஷிஷ் ஷெலார், சிவசேனாவின் வருடாந்திர தசரா பேரணி ஒடிடியில் வெளியான ஒரு தோல்வியுற்ற படம். உத்தவ் தாக்கரே தனது இந்துத்துவாவை ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவாவுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான (என்.சி.பி.) கூட்டணிக்கு பின்னர், உத்தவ் தாக்கரேயின் இந்துத்துவா கலப்படமடைந்து விட்டது. தாக்கரேவிற்கு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) "இந்துத்துவ சான்றிதழ்" தேவை என்று கூறினார்.
மேலும், உங்கள் பாதுகாப்பின்மை காரணமாக இந்த அரசாங்கத்தை கவிழ்க்கச் சொல்கிறீர்கள். தேவேந்திர பட்னாவிஸ் இந்த அரசாங்கத்தை நடத்துமாறு ஏற்கனவே கேட்டுக் கொண்டார் என்று ஷெலார் கூறினார்
தாக்கரே பற்றிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரின் கருத்துக்கு பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடந்த சிவசேனாவின் வருடாந்திர தசரா பேரணியில் தாக்கரே, 'இந்துத்துவா பிரச்சினையை' எழுப்பியதை தொடர்ந்து ஆஷிஷ் ஷெலார் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
முன்னதாக தாக்கரே, எங்களுடைய மதபற்று குறித்தும், நாங்கள் ஏன் மாநிலத்தில் கோயில்களை மீண்டும் திறக்கவில்லை என்பது பற்றியும் கேட்கப்படுகிறது. எனது இந்துத்துவா பாலாசாகேப் தாக்கரேயிடமிருந்து வேறுபட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். உங்களுடையது மணிகள் மற்றும் பாத்திரங்களை இறுகப் பற்றியது, எங்கள் நம்பிக்கை அப்படி இல்லை எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : ஒபிசி இடஒதுக்கீடு; பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!