அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற 63ஆவது இந்தியா-ஜெர்மன் வர்த்தகப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது உரையாற்றிய அவர், "பலதரப்பு வர்த்தக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதே ஜெர்மனி அரசின் நோக்கமாகும். இதில், இந்தியாவையும் சேர்ந்துக்கொள்ள விரும்புகிறோம்" என்றார்.
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் ( Multilateral World Order) என இந்தியாவும், ஜெர்மனியும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் என கடந்த காலத்தில் இருநாடுகளும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க : தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த ஜெர்மனி முதலீடு!