ETV Bharat / bharat

கொரோனாவுக்கு எதிராக ஒரு உலகப்போர் - PANDEMIC

பல நாடுகளில், ஏழ்மையான மாணவர்கள் பள்ளிகளில் வழங்கப்படும் உணவை நம்பியிருகின்றனர். பள்ளி மூடல்களின் விளைவாக மாணவர்களின் கல்வியும், ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுள்ளது.

corona
corona
author img

By

Published : Mar 14, 2020, 12:30 PM IST

இத்தாலியின் சில பகுதிகளில், குவாரண்டைன் கட்டுப்பாடு நடவடிக்கைளை பின்பற்றாதவர்களை சிறைபடுத்துமாறு அரசு உத்தரவளித்துள்ளது. இது போன்ற அரசாணைகள் வகுப்புவாத மற்றும் மதக்கலவரம் போன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். குடிமக்களை கொரோனா வைரஸ்ஸிடமிருந்து காக்க, இத்தாலியன் அரசு ஒரு முழுமையான ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது இதுவே முதன் முறை.

நாவல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பீதி பரவச்செய்துள்ளது. பல நாடுகளில் சுற்றுலா துறை படுசரிவை சந்தித்துள்ளது. இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில், ஏதேனும் அவசர சூழ்நிலைகளை தவிர்த்து மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளிவர மறுத்துவருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் சீனாவின் வூஹான் மாகாணத்தை இந்த வைரஸ் முதன்முதலில் தாக்கியதையடுத்து, உலகம் முழுக்க பல நாடுகளிலும் வேகமாக பரவிவருகின்றது. இது உலக சுகாதார அமைப்பையே (WHO) அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஜனவரி 30ஆம் தேதி, கொரோனா வைரஸின் காரணமாக WHO சர்வதேச அளவில் ஒரு பொது சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. பரவலாக உலகம் முழுவதும் வைரஸ் பரவிவரும் நிலையில், WHO பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை விரைவாக தொடங்கி வைத்து செயல்படுத்திவருகிறது. இன்றைய தேதி வரை, WHO அமைப்பு மக்களை வைரஸ்ஸிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவுமாறு 1.30 லட்சம் மருத்துவ நிபுணர்களுக்கு இணையத்தின் மூலமாக 7 மொழிகளில் பயிற்சியளித்துள்ளது. பல நாட்டின் தலைவர்களின் ஒருங்கினைந்த நடவைக்கைகளையும் மீறி, குறிப்பிடத்தகும் முடிவுகள் ஏதும் கிடைக்கவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. இந்த வைரஸின் பரவல் வெகுவாக பெருகிவருகிறது. மக்களிடையே இதனால் பீதியும், பதற்றமும் நிலவுகிறது. சீனா உட்பட பல நாடுகளில் இறப்பு எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. எதையும் கணிக்கமுடியாத இந்த சூழ்நிலை, பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள 109 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவிவிட்டது. எந்த நாடு சரியான நேரத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வைரஸை எதிர்கொல்கிறதோ அதுவே வைரஸ் பரவலை தடுப்பதில் பெரும்பான்மையான பொறுப்பேற்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு நாடு போதுமான மருத்துவ உதவிகளை அளிக்க மறுக்குமானால், நிலமை இன்னும் மோசமாகும் அபாயத்தை புரந்தள்ளிவிடமுடியாது. எல்லா நாடுகளும் WHO அமைப்புடன் ஒத்துழைத்து, உடனடி மருத்துவ உதவிகளை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கும் இதுவே சரியான நேரம். மருத்துவ உதவியளிப்பதில் ஒரு சின்ன அலட்சியமான முடிவு கூட ஏற்கனவே நெருக்கடியான நிலைமையை இன்னும் சிக்கலாக்கிவிடும்.

உலகம் முழுவதும் கரோனோ வைரஸால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 3,850-ஐ தாண்டியுள்ளது. இதில் சீனாவில் மட்டுமே 3,120 உயிரிழப்புகள். இத்தாலியில் 366 நபர்களும், ஈரானில் 237 நபர்களும் கொரோனா வைரஸின் பாதிப்பினால் இறந்துள்ளனர். சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1.11 லட்சத்தை தாண்டியுள்ளது. சீன அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 1000 படுக்கைகளுடைய ஒரு மருத்துவமனையை கட்டியுள்ளது. மேலும் வூஹான் மாகாணம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 50 வருடங்களில், பல்வேறுபட்ட வைரஸ் தாக்குதல்கள் பொதுமக்களின் வாழ்கையை பாதித்துள்ளது.1967இல் மார்பர்க் வைரஸ், 1976இல் எபோலா வைரஸ், 1994இல் ஹீரா மற்றும் பறவைக்காய்ச்சல், 1998-இல் நிப்பான், 2002இல் சார்ஸ், 2009இல் பன்றிக்காய்ச்சல், 2012-இல் மெர்ஸ் வைரஸ், மற்றும் 2013-இல் பறவைக்காய்ச்சல் என பல முறை பொதுமக்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்புகளால் உலகம் முழுக்க ஏறத்தாழ 762.6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009-இல் பரவிய பன்றிக்காய்ச்சல் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பறவைக்காய்ச்சல் பரவி ஏழு வருடங்களுக்கு பிறகு, தற்போது கொரோனா உலகம் முழுக்க பரவி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக பொருளாதாரத்துறை வீழ்ச்சியடைந்துவருகிறது.

கொரோனா வைரஸ் வேகமாக இத்தாலி, ஈரான், சவுத் கொரியா, ஃபிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் UAE ஆகிய நாடுகளில் பரவி வருகிறது. அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி மக்கள் பொது-இடங்களில் கூடுவதையும், பயணிப்பதையும் குறித்து எச்சரிக்கையாகியுள்ளனர். சில இடங்களில், அரசே தனது குடிமக்களுக்கு வீடு தேடி உணவுபொருட்களை வழங்கி வரும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தடைசெய்துள்ளது. மருந்து இரசாயனங்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டு, அதன் தாக்கமாக மருந்து தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயணங்களை தவிர்த்து வருவதானால், சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை முழுவதுமாக வீழ்ச்சியடையும் அச்சமும் எழுந்துள்ளது.

விமான நிலையங்களில் சுகாதார ஆய்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநாடுகள், கூட்டங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் மீது தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 26 முதல் 29 வரை அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் நடைபெற்ற கன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் கலந்துகொண்ட இருவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்து அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி ட்ரம்ப்-உம் கலந்து கொண்டிருந்தார். வைரஸின் பாதிப்பு எவ்வளவு அச்சம் உண்டாகுவதாக இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே உதாரணம். சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் கணிப்பின் படி, COVID-19 வைரஸ் பரவலால் 11, 300 கோடி அமெரிக்க டாலர் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

விமான துறையில் மட்டுமே இவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்படுமானால், வருங்காலதில் சந்திக்க வேண்டிய விளைவுகள் கவலையளிக்கின்றது. வைரஸின் பரவல் உற்பத்தி துறையையும் தாக்கியுள்ளது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் தொழிற்சாலைகளிலேயே தேக்கமடைந்துள்ளன. தொழிற்சாலைகள் மூடப்பட்டதனால் வேலையாட்களும், தொழிலாளர்களும் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையை இடைப்பட்ட வணிகர்களும், தரகர்களும் தவறான முறையில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினர். பாதுகாப்பு முகமூடிகளின் விலை வானளவாக உயர்ந்துள்ளது. மருத்துவ பணியாளர்கள்களும் இந்த முகமூடிகளின் பற்றாக்குறையை சந்திக்கின்றனர் என WHO செய்தி வெளியிட்டுள்ளது.

இருக்கின்ற தேவையை பூர்த்தி செய்யுமாறு இவற்றின் உற்பத்தி இருக்கவேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. COVID-19 பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ WHO அமைப்பு முன்வந்துள்ளது. பல்வேறு நாடுகளில் இதற்காக நிதி திரட்டும் பிரசாரங்களை WHO தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதலை எதிர்கொண்டுவரும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவும் வகையில் உலக வங்கி 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்க உறுதியளித்துள்ளது. எல்லா நாடுகளும் இந்த வைரஸ் தோற்று நோய்க்கு எதிராக போராட ஒன்றுகூடி நிதி திரட்டி வருகின்றன.

பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் இயல்பு வாழ்கையை முடக்கி, கொந்தளிப்புகளை ஏற்படுத்தி வரும் வேளையில், இந்தியாவில் நிலைமை இன்னும் கட்டுபாட்டில்தான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில், 45 நபர்கள் COVID-19 சோதனையில் பாசிடிவ்வாக இருப்பது தெரியவந்துள்ளது. இதில், 16 பேர் இத்தாலியன் சுற்றுலாப்பயணிகள். மீதி இருக்கும் நோயாளிகளின் உடல் நிலை சீராக இருப்பதானால், கவலை கொள்வதற்கு காரணமில்லை. வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் 6 லட்சம் பயணியருக்கு முதல்நிலை சுகாதார சோதனைகள் நடதப்பட்டன.பாதிக்கப்பட நோயாளிகள் முன்னுரிமையுடன் சிகிச்சை பெற்றுவருவதால், உடனடியாக ஏதும் அச்சுறுத்தல் இல்லை. ஆனால் அரசு இந்த மெத்தனமான போக்கை கைவிடவேண்டும்.

அதிகாரிகள் முன்னெப்போதையும் விட விழிப்புடன் இருக்க வேண்டும். அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத் வந்த தொழில்நுட்ப பணியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததையடுத்து, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் உயர் எச்சரிக்கை நிலையில் இருந்தன. மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. குடிமக்கள் சமூக வலைதளங்களில் ச்ச்சரிக்கை செய்யப்பட்டனர். அதிகாரிகள் வைரஸை எதிர்த்து போராடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை தவறான முறையில் பயன்படுத்தாமல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

மருத்துவ நிறுவனங்களுக்கு தேவையான சாதனங்கள் வழங்கப்படவேண்டும். அதி நவீன ஆராய்ச்சிக் கூடங்கள் செயல்படவேண்டும். பொதுமக்கள்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பெறச்செய்யவேண்டும். மருத்துவ வல்லுநர்கள்களும், அரசு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து முயற்சித்தால் பெரும்பாலான அச்சுறுத்தல்களை கட்டுக்குள் கொண்டுவந்துவிடமுடியும்.

COVID-19 பரவல் கல்வித்துறையையும் வெகுவாக பாதித்துள்ளது. UNICEF அமைப்பு இது குறித்த கவலையை எழுப்பியுள்ளது. UNICEF சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, உலகம் முழுக்க 22 நாடுகளில், ஏறத்தாழ 29 கோடி மாணவர்கள் பள்ளி செல்வதை நிறுத்தியுள்ளனர். 13 நாடுகளிளுள்ள அரசாங்கங்கள் மார்ச் 15-ஆம் தேதி வரை அதிகாரபூர்வமாக அணைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளன. மீதியுள்ள 9 நாடுகள் பாதிக்கப்பட இடங்களில் மட்டும் விடுமுறைகள் அறிவித்துள்ளன. சீனாவில் மட்டும் 23 கோடி மாணவர்கள் பள்ளி செல்வதை நிறுத்தியுள்ளனர்.

இந்த பள்ளி மூடல்களால் படிப்பு பாதிக்காமல் இருக்க மாற்று முறையில் தொலைதூரக் கல்வி பாடங்களை உருவாக்க UNESCO பரிந்துரைத்துள்ளது. இந்த ஏற்பாடு நல்ல இணைய இணைப்புடன் இருக்கும் இடங்களின் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் அடிப்படை வசதிகளற்ற பல தொலைதூர இடங்கள் இருக்கின்றன. அது போன்ற இடங்களில், கல்விக்கு இடையூறு ஏற்படுவதின் சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. அதிலும் ஏழையான மாணவர்களின் கல்வி பாதிக்கபடுவதன் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இந்தியா போலவே பல்வேறு நாடுகளில் பள்ளிகூடங்களில் மதிய-உணவுத் திட்டங்கள் இருக்கின்றன.

இதனால் வறுமையால் பாதிக்கப்பட்ட வீடுகளிளிருந்து வரும் மாணவர்களின் உடல்நலம் மோசமடைவதன் சாத்தியங்களும் அதிகமாக இருக்கின்றது. பல நாடுகளில், ஏழ்மையான மாணவர்கள் பள்ளிகளில் வழங்கப்படும் உணவை நம்பியிருகின்றனர். பள்ளி மூடல்களின் விளைவாக மாணவர்களின் கல்வியும், ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.