அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியாவில் கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக 5.51 லட்சம் விளக்குகளை ஒரே நேரத்தில் ஏற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கின்னஸ் சாதனையில் இடம்பெறுவதற்கு அனைத்து விளக்குகளும் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் எரிய வேண்டும்.
இதற்காக பல்கலைக்கழகத்தை சேர்ந்த 5000 மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 5.51 லட்சம் விளக்குகளை ஏற்றுவதற்கு ரூ.10 லட்சத்திற்கு பஞ்சும், 40 லிட்டர் எண்ணெயும் வாங்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த கின்னஸ் சாதனைக்காக ரூ. 65 லட்சம் செலவிடப்படவுள்ளது.
கடந்த ஆண்டு 3 லட்சம் விளக்குகளை ஏற்றியதே சாதனையாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு அதனை முறியடிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு மாநில சுற்றுலாத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வந்தாச்சு தீபாவளி; ஹைதராபாத்தில் குவிந்துள்ள களிமண் விளக்குகள்!