ETV Bharat / bharat

உலக நோய்த்தடுப்பு நாள்: தடுப்பூசியை சரியான நேரத்தில் போடுவதன் முக்கியத்துவம்! - உலக நோய்த்தடுப்பு நாள்

தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் நிச்சயமாக கால தாமதம் ஏற்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ayday
ay
author img

By

Published : Nov 10, 2020, 7:28 PM IST

உலக நோய்த்தடுப்பு நாள் ஆண்டுதோறும் நவம்பர் 10ஆம் தேதி, சில நோய்களுக்கு எதிராக சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகிறது. நோய்த்தடுப்பு தடுப்பூசி மூலம் போலியோ, காலரா, கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் போன்ற பல தொற்று நோய்களுக்கு எதிராக போராடுவதை குறிக்கிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது, கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட அபாயகரமான நோய்களுக்கு எங்களிடம் தடுப்பூசி உள்ளது.

இது எல்லா வயதினரும் நீண்ட காலம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுகின்றன. கீழே குறிப்பிட்டுள்ள சில நோய்கள் பட்டியல்:

வாய் புற்றுநோய்
காலரா
டிப்தீரியா
ஹெபடைடிஸ் B
குளிர் காய்ச்சல்
ஜப்பானிய என்செபாலிடிஸ்
தட்டம்மை
மூளைக்காய்ச்சல்
பெர்டுசிஸ்
நிமோனியா
போலியோ
ரேபிஸ்
ரோட்டா வைரஸ்
ரூபெல்லா
டெட்டனஸ்
டைபாய்டு
வரிசெல்லா
மஞ்சள் காய்ச்சல்

மேலும், டிஃப்தீரியா, டெட்டனஸ், பெர்டுசிஸ், இன்ஃப்ளூயன்ஸா, அம்மை போன்ற நோய்களிலிருந்து நோய்த்தடுப்பு தற்போது ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 3 மில்லியன் இறப்புகளைத் தடுக்கிறது. 2019 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 85% குழந்தைகளுக்கு (116 மில்லியன் குழந்தைகள்) 3 டோஸ் டிப்தீரியா-டெட்டனஸ்-பெர்டுசிஸ் (டிடிபி 3) தடுப்பூசி கிடைத்தது, இது கடுமையான நோய் பாதிப்பு ஏற்படுத்தும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.ஆனால், 20 மில்லியன் குழந்தைகள் தட்டம்மை, டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் தடுப்பூசிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தடுப்பூசிகள் உயிருக்கு ஆபத்தான நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான பாதுகாப்பான வழியாகும். தடுப்பூசிகள் புண், கை அல்லது லேசான காய்ச்சல் போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

ஒரு ஊசி, ஒரு சிரிஞ்ச் ஒரே முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், ஒரே ஊசியை பயன்படுத்துவது நோயைப் பரப்ப அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதனை உறுதி செய்வது நல்லது. அதே போல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தான் எதிர்காலத்தில் நோய் தொற்றுக்கு ஆளாகாமல் தடுத்திட முடியும். எந்த விதமான தடுப்பூசியை முயற்சிப்பதற்கு முன்பும், மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

எனவே, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பான முறையில் தடுப்பூசி பெற அனைவருக்கும் உரிமை உண்டு. நோயாளிகள் மட்டுமல்ல, சுகாதாரப் பணியாளர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு தடுப்பூசி என்ன, எப்போது கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உங்களின் மருத்துவர் அல்லது குழந்தை மருத்துவரிடம் கேளுங்கள்.

குறிப்பாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளைத் தவிர்க்கவோ தாமதிக்கவோ வேண்டாம். மேலும், தற்போதைய சூழ்நிலையில், கரோனா வைரஸ் நாவலை உலகம் எதிர்த்துப் போராடுகையில், வைரஸ் இன்னும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பல நாடுகள் தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன, சில சோதனைகள் உள்ளன. எனவே, இந்த அபாயகரமான நோய்க்கு எதிராக நோய்த்தடுப்பு அல்லது நோய் தீர்க்கும் சிகிச்சை கிடைக்கும் வரை மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.