வடமாநிலங்களில் வெகுவாகக் கொண்டாடப்படும் பண்டிகை 'சாத்' குறித்து விரிவாக முதல் முறையாக எழுதியவர் மருத்துவர் சாந்தி ஜெயின். இவருக்கு இந்தாண்டுக்கான பத்மஸ்ரீ விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் சாந்தி ஜெயின், நாட்டுப்புற இசை, கலாசாரம், இலக்கியங்களில் சிறப்பான பங்களிப்பை செய்ததற்காக இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இவர் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “இந்த விருதுக்கான பரிந்துரை தாமதமாக வந்தது. ஆனாலும் காத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு நபரின் கடின உழைப்பு உறுதியானது. நாட்டுப்புறக் கவிதைகள் குறித்து 12 புத்தகங்களும், நாட்டுப்புற இலக்கியங்கள் குறித்த 14 புத்தகங்களும் தற்போது சந்தையில் கிடைக்கின்றன.
பிகாரில் நான் செய்த பணிக்காக ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனால் நான் தேசிய அளவில் பல முறை கௌரவிக்கப்பட்டேன்” என்றார்.
எழுத்தின் மீதான காதல் சாந்தியை ஆக்கிரமித்தபோது அவருக்கு வயது 6.
முதலில் பிரபலமான பாலிவுட் பாடல்களுக்கு ஏற்ப வரியை உருவாக்கினார். இவர் எழுதிய கதையை முதல் முறையாக சூரத்தில் உள்ள பத்திரிகை ஒன்று வெளியிட்டது. அப்போது அவருக்கு வயது 9. இவரின் நாட்டுப்புற கவிதைகளை உள்ளடக்கிய அவரது முதல் புத்தகம் 1977ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
அவரது கவிதைகள், பாடல்கள் ஆகாஷ்வானியால் அங்கீகரிக்கப்பட்டன. அவை இன்னும் வானொலியில் இசைக்கப்படுகின்றன. லக்னோ இசை நாடக அகாதமியிலிருந்து 'சைட்டி' குறித்த தனது முதல் புத்தகத்தை எழுத சாந்தி உதவியும் ஊக்கமும் பெற்றார்.
முதல் புத்தகத்திற்கான ராஜ்பாஷா புராஸ்கர் விரும் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்.டி. ஜெயின் கல்லூரியில் சமஸ்கிருதத் துறைத் தலைவர் பதவி வகிக்கிறார். தற்போது விடுப்பிலிருக்கும் சாந்தி, எழுதுவதில் மும்முரம் காட்டுகிறார்.
நாட்டுப்புற கலாசாரத்தைப் பற்றி சிறந்த இலக்கியங்களை ஆராய்வதற்கும் எழுதுவதற்கும் அதிக நேரத்தை முதலீடு செய்கிறார். சாதனையாளர்கள் போற்றப்பட வேண்டும் என்பதும் சாந்தியின் நம்பிக்கை. இருப்பினும் சாந்தியைப் பொறுத்தவரை அவர் தனது பாதையில் முழுக் கவனம் செலுத்துகிறார்.
இதையும் படிங்க: எலிக்கூண்டுடன் நுழைந்த எதிர்க்கட்சிகள்: பிகார் சட்டப்பேரவையில் நூதனப் போராட்டம்