ETV Bharat / bharat

'பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மகளிர் ஆணைய குழு விசாரிக்கும்'- தலைவர் அறிவிப்பு - மகளிர் ஆணைய குழு

திருச்சி: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மகளிர் ஆணைய குழு விசாரிக்கும் என்று அதன் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் கூறினார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்
author img

By

Published : Mar 16, 2019, 11:25 PM IST

திருச்சியிலிருந்து வரப்பெற்ற 3 புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான கண்ணகி பாக்கியநாதன் திருச்சி வந்தார்.

விசாரணைக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள தனியார் மகளிர் விடுதிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இதுவரை 145 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது. இதன் முதற்கட்டமாக 63 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 82 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலியல் கொடுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கோவை எஸ்.பி. வெளியிட்டது மற்றும் தமிழக அரசு ஆணையில் பெயர் இடம் பெற்றது குறித்து நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்படும்.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக வந்த புகார்கள் குறித்து நான் நேரில் சென்று விசாரணை நடத்தினேன். அடுத்த கட்டமாக மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து தனிப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்படும். தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக உள்ளது. எனினும் பெண்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். தெரியாத நம்பரில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால் பேசக்கூடாது. தெரியாத நபர்களிடம் சாட்டிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்

குடும்பத்திற்கும், பயிலும் கல்வி நிறுவனத்திற்கும் நற்பெயர் கிடைக்கும் வகையில் பெண்கள் முடிவெடுத்து செயல்பட வேண்டும். பெண்களுக்கு உதவி செய்யும் ஹெல்ப்லைன் திட்டம் உள்ளது. அதை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற மகளிர் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Intro:தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Body:திருச்சி:
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மகளிர் ஆணைய குழு விசாரிக்கும் என்று அதன் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் கூறினார்.
திருச்சியிலிருந்து வரப்பெற்ற 3 புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான கண்ணகி பாக்கியநாதன் திருச்சி வந்தார். விசாரணைக்குப் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள தனியார் மகளிர் விடுதிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இதுவரை 145 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது இதன் முதல் கட்டமாக 63 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 82 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் கொடுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கோவை எஸ்.பி. வெளியிட்டது மற்றும் தமிழக அரசு ஆணையில் பெயர் இடம் பெற்றது குறித்து நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்படும். பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக வந்த புகார்கள் குறித்து நான் நேரில் சென்று விசாரணை நடத்தினேன். அடுத்த கட்டமாக மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து தனிப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக உள்ளது. எனினும் பெண்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். தெரியாத நம்பரில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால் பேசக்கூடாது. தெரியாத நபர்களிடம் சாட்டிங் செய்வதை தவிர்க்க வேண்டும். குடும்பத்திற்கும், பயிலும் கல்வி நிறுவனத்திற்கும் நற்பெயர் கிடைக்கும் வகையில் பெண்கள் முடிவெடுத்து செயல்பட வேண்டும். பெண்களுக்கு உதவி செய்யும் ஹெல்ப்லைன் திட்டம் உள்ளது. அதை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற மகளிர் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Conclusion:பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.