அமேதி மாவட்டத்தில் நிலத் தகராறு வழக்கில் காவல் துறையினர் செயலிழந்ததாகக் கூறி ஜூலை 17ஆம் தேதி சஃபியா (50) என்ற பெண்ணும், அவரது மகளும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்திற்கு முன்பு தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 50 வயதான சஃபியா நேற்று (ஜுலை 21) இரவு 11.45 மணியளவில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகள் சிகிச்சை பெற்று வருகிறார் என்று எஸ்பிஎம் சிவில் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து, லக்னோ போலீஸ் கமிஷனர் சுஜீத் பாண்டே கூறும்போது, "இந்த சம்பவத்ம் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. இது ஒரு கிரிமினல் சதி, அதில் சிலர் அவர்களை (சஃபியா மற்றும் அவரது மகள்) தூண்டினர்.
அவர்களை தீ குளிக்க தூண்டிய ஆஸ்மா, சுல்தான், கதிர் கான் (ஏ.ஐ.எம்.ஐ.எம்-யின் அமேதி மாவட்ட தலைவர்),அனூப் படேல் (முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்) என நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது"என்று அவர் கூறினார்.
மேலும், இந்த பெண்கள் உ.பி. காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்று அனூப் படேலைச் சந்தித்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்று போலீஸ் கமிஷனர் கூறியிருந்தார். எவ்வாறாயினும், இந்த வழக்கில் அமேதியிலிருந்து தனது கட்சித் தலைவர்களில் ஒருவரை போலீசார் ஈடுபடுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்ஞ்சாட்டியது.
இதையடுத்து, நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் கீழ், சட்டம் ஒழுங்கின் மோசமான வடிவத்தை மறைக்க காங்கிரசின் அமேதி பிரிவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரின் பெயரை போலீசார் இழுத்துச் செல்கின்றனர் என்று யுபிசிசி துணைத் தலைவர் வீரேந்திர சவுத்ரி குற்றஞ்சாட்டினார்.