மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த பபிதா அஹிர்வா என்ற பெண்ணுக்கு இன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தை 2 தலை, 3 கைகளுடன் பிறந்துள்ளது. எனினும் அக்குழந்தைக்கு இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் ஒன்று மட்டுமே உள்ளது.
தற்போது, தாய் பபிதா அஹிர்வார், குழந்தை இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
குழந்தையின் உடலில் ஒரு தலை, ஒரு கை உள்ளிட்ட தேவையில்லாத உறுப்புகளை அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன பபிதா அஹிர்வாருக்கு இது முதல் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன்களை மறக்கச்செய்ய கோழிக்குஞ்சுகள் பரிசு' - இந்தோனேசிய அரசின் அடடே திட்டம்!