ஜெய்பூர் (ராஜஸ்தான்): சவாய் மாதோபூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது அரசுப்பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த 40 வயது பெண் ஒருவரை மூன்று நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யததாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடும் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி இரவு நிகழ்ந்துள்ளது. இதில் தொடர்புடைய மூன்று நபர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ஊரடங்கினால் சவாய் மாதோபூரில், ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ராம் ரஹீம் பரோலை நிராகரித்தது சிறைத் துறை!
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வெள்ளிக்கிழமை பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ரிஷிகேஷ் மீனா, லகான் ரீகர், கமல் கர்வால் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்த் சர்மா தெரிவித்தார்.