திருவனந்தபும் மாவட்டம், கணியாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புதுக்குறிச்சி பகுதியில் தனது கணவரைத் தேடி, அவரது நண்பர் வீட்டுக்கு குழந்தையுடன் நேற்று (ஜூன்.4) இரவு சென்றுள்ளார். அப்போது அங்கு கணவரின் நண்பருடன் வேறு சிலரும் உடனிருந்தனர். அவர்கள் அனைவரும் மது அருந்தி குடிபோதையில் இருந்துள்ளனர்.
அப்போது கணவரை தேடி வந்த பெண்ணை தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அவர்களது பிடியில் இருந்து தப்பிய அந்தப் பெண், உடலில் காயங்களுடன் தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அருகிலிருந்த கடினம்குளம் காவல் நிலையத்தில், தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது கணவர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.