ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர், தனுஜா மொஹந்தி. இவர் தனது பணியை முடித்துவிட்டு காலை ஆறு மணியளவில், தனது காவலர் குடியிருப்புக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் அணிந்திருக்கும் நகையைப் பறிக்கும் முயற்சியில் மெஹந்தியை திசைத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதற்கு அவர் ஒத்துழைப்பு தராததால், அவரை வலுக்கட்டாயமாக கீழேத் தள்ளி நகையை பறிக்க முற்பட்டனர். இதனால் அச்சமடைந்த மெஹந்தி கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அவரது கணவர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
பின்னர், மெஹந்தியையும், அவரது கணவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் மெஹந்தியிடமிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து, காவல் துணை கண்காணிப்பாளரான மெஹந்தி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.