ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தெந்துளுகுந்தி பகுதியில் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக, அப்பகுதியுள்ள நதி வழியாக படகில் போதாகர் அணைக்கு அழைத்துவந்துள்ளனர். கரைக்கு வந்து வெகுநேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
நேரம் ஆக ஆக அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. மிகுந்த வலியில் துடித்த அவர், நதிக்கரையோரத்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்தார். தாமதமாக வந்த ஆம்புலன்ஸுல் பிரசவித்த பெண் தெந்துளுகுந்தி சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். பிரசவ வலியில் துடித்தப் பெண்ணை அழைத்துச் செல்ல முறையான வசதிகள் செய்துகொடுக்காத சுகாதாரத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: நூற்றாண்டை கடந்த இஸ்லாமிய பெண்கள் பள்ளி!