டெல்லி: விகாஸ்புரியில் சிஆர்பிஎஃப்-இல் பணிபுரியும் பெண் காவலருக்கு வாட்ஸ்அப் மூலம் உளவாளியாக மாற பாகிஸ்தானில் இருந்து அழைப்பு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பான தகவலின் படி, “உங்களின் குடும்பத்தை குறித்து அனைத்தும் நாங்கள் அறிவோம். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். எங்கள் நாட்டிற்கு உளவாளியாக நீங்கள் மாற வேண்டும்” என்று அந்த அழைப்பில் கூறியிருக்கிறார் அந்த அடையாளம் தெரியாத நபர்.
தற்போது இது மிக முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் செயல்பாடாக கருத்தப்பட்டு, வழக்குப் பதிந்து சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பல முறை ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தினர், ராணுவத்தினர் சிலரைத் தொடர்புகொண்டு, உளவாளியாக மாற விரும்புகிறீர்களா என்று கேட்பது நடந்தேறியுள்ளது.
இது குறித்து சிறப்புப் பிரிவு துரிதமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.