ஓடிசா மாநிலம் பாண்டபாடா பகுதியில் வசித்து வந்த ஜுவாங்(30) என்பவருக்கும், அவரது கணவர் ராயா ஜுவாங்(35)க்கும் வீட்டுப் பிரச்னை தொடர்பாக கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. அப்போது ராயா ஜுவாங், தனது தாய், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து தனது மனைவியைத் தாக்கியுள்ளார்.
இரக்கமற்ற முறையில் கட்டையை வைத்து தாக்கியதில் பெங்கா ஜுவாங் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து ராயா ஜுவாங், அவரது தாய், குடும்ப உறுப்பினர்கள் சிலரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மண் சரிந்து கல்குவாரி தொழிலாளி பலி