ETV Bharat / bharat

தெலங்கானா நகரங்களில் அதிகரிக்கும் கரோனா! - அதிகரிக்கும் கரோனா

ஹைதராபாத்: தெலங்கானா நகரங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், சோதனைகளை தீவிரப்படுத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெலங்கானா நகரங்களில் அதிகரிக்கும் கரோனா!

author img

By

Published : Jul 28, 2020, 8:15 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் நாட்டில் இதுவரை 33ஆயிரத்து 425 பேர் உயிரிழந்தும், 14 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இதில் தெலங்கானாவில் 55ஆயிரத்திற்கு அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் ஆயிரத்து 473 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கிரேட்டர் ஹைதராபாத்தின் கீழ்வரும் மாவட்டங்களில் ரங்கா ரெட்டியில் 168 பேர், வாரங்கல் நகர பகுதி 111 பேரும், சங்கரெட்டியில் 98 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக மேற்கண்ட மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் பதிவான கரோனா பாதித்தவர்கள் குறைவு. ஆனால் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி ஹைதராபாத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் மூலம் கிராமங்களுக்கு பரவியுள்ளது. இதனால் மாநகராட்சிகளில் சோதனைகளை தீவிரப்படுத்த, ஊழியர்களுக்கு மாநில அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இது குறித்து தெரிவித்துள்ள பொது சுகாதார இயக்குநர் சீனிவாஸ் ராவ், “தெலங்கானாவில் கரொனா பரவல் அதிகரித்துவருகிறது. இதில் ஹைதராபாத்தில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றார்.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தெலங்கானாவில் குறைவான பரிசோதனைகள்தான் செய்யப்பட்டுள்ளன. தெலங்கானாவில் இதுவரை மூன்று லட்சத்து 63ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுத்த கடைக்குட்டி சிங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.