நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 45 ஆயிரத்து 720 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் 1,129 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 12 லட்சத்து 38 ஆயிரத்து 635 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 லட்சத்து 26 ஆயிரத்து 167 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 7 லட்சத்து 82 ஆயிரத்து 606 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 29 ஆயிரத்து 861 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 823 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் ஒரு கோடியே 50 லட்சத்து 75 ஆயிரத்து 369 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை காப்பாற்றுங்கள்; 10 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்