பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று பல்வேறு செய்திகள் வெளியானதைத்தொடர்ந்து தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவு வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து, அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனும் தனக்கு கரோனா தொற்று இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவரது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், இவர்களது மகளான ஆரத்யாவுக்கும் கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் விரைவில் குணம் பெறவேண்டி, ரசிகர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் தனது கருத்துகளைப் பதிவு செய்துவந்தனர்.
இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மகன் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் நோயிலிருந்து மீண்டு வரவேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.