நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபின் நடைபெறும், இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும்.
குளிர்காலக் கூட்டத்தொடரில், ஜம்மு - காஷ்மீரில் நிலவும் சூழல், பொருளாதார சுணக்க நிலை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி மத்திய அரசிடம் பதில் பெற எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இச்சூழலில், நடப்பு கூட்டத் தொடரில் குடியுரிமை மசோதாவை நிறைவேற்ற பாஜக தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
நெகிழிக்கு உணவுத் திட்டம் - மலப்புரத்தில் தொடக்கம்!
மேலும், வருமானவரிச் சட்டம் மற்றும் நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்து செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டம், இ-சிகரெட் விற்பனை, தயாரித்தல், விற்பனைக்காக இருப்பு வைத்தல் ஆகியவற்றுக்கு எதிரான அவசரச் சட்டம் ஆகிய இரண்டு மசோதாக்களைச் சட்டமாக மாற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் விவாதங்களால் குளிர் கால கூட்டத்தொடரில் அனல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.