ETV Bharat / bharat

அபிநந்தனுக்கு கிடைத்த புதிய பெருமை

author img

By

Published : May 16, 2019, 2:08 PM IST

ஸ்ரீநகர்: இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் வீரச் செயலை நினைவுகூறும் விதமாக, ஸ்ரீநகரில் உள்ள படைப்பிரிவினர் 'பால்கன் ஸ்லேயர்ஸ்' என்ற புதிய பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

abhinandan

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது.

அந்த சமயத்தில் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பணியில் இருந்த விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானத்தை துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தினார். அப்போது பாகிஸ்தான் எல்லையில் புகுந்ததால் இந்திய விமானப்படை மிக்-21 பைசன் ரக விமானத்தை சுட்டு அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர்.

பின்னர், இரண்டு நாட்கள் கழித்து அபிநந்தன் மீண்டும் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார். இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அபிநந்தன் இந்தியா முழுவதிலும் ஒரு ஹீரோவாகவே பார்க்கப்பட்டார்.

இந்நிலையில் அபிநந்தனின் இந்த வீரச் செயலை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில் பிரத்யேக பேட்ஜ் ஒன்று தயாரிக்கப்ட்டுள்ளது. பால்கன் ஸ்லேயர்ஸ் என்றழைக்கப்படும் இந்த பேட்ஜ் அபிநந்தனின் பணிபுரியும் மிக்-21 பைசன் 51வது படைப்பிரிவு, வீரர்களின் உடையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பேட்ஜில் அபிநந்தன் சென்ற மிக் ரக விமானமும், அவரால் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-16 ரக விமானமும் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் விமானப்படை விமானத்தின் ஏவுகணை தாக்குதலில் தப்பித்த இந்த படையினருக்கு ‘அம்ராம் டாட்ஜர்’ என்ற பெயரும் அவர்களின் உடையில் பொருத்தப்பட்டுள்ளது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/bharat/bharat-news/falcon-slayers-amraam-dodgers-patches-bestowed-on-wing-commander-abhinandans-sqaudron/na20190515222148305

Wing Commander Abhinandan's squadron gets 'Falcon Slayers’, 'AMRAAM Dodgers' patches

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.