ETV Bharat / bharat

'வீர் சக்ரா' விருதுக்கு அபிநந்தன் பெயர் பரிந்துரை!

author img

By

Published : Apr 21, 2019, 5:36 PM IST

டெல்லி:  பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய இந்திய ராணுவ விங் கமாண்டர் அபிநந்தனின் பெயர் 'வீர் சக்ரா' விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அபிநந்தன்

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது, இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அமைதி திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அபிநந்தனை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மார்ச் 1ஆம் தேதி இந்தியா எல்லையான வாகாவில் கம்பீர நடையுடன் வந்த அபிநந்தனை நாடே கொண்டாடியது.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனை முடிந்ததையடுத்து ஸ்ரீநகரிலிருந்து பணிபுரிந்து வந்த அபிநந்தன், தற்போது பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவின் மேற்கு பிராந்திய பகுதிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, போர் காலத்தில் சிறப்பான பணிக்காக வழங்கப்படும் 'வீர் சக்ரா' விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயரை இந்திய விமானப்படை பரிந்துரை செய்துள்ளது.

பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகளுக்கு அடுத்து வழங்கப்படும் உயரிய விருது 'வீர் சக்ரா' என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

போர் காலத்தில் சிறப்பான பணிக்காக வழங்கப்படும் வீர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை செய்தது இந்திய விமானப்படை பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகளுக்கு அடுத்து வழங்கப்படும் உயரிய விருது வீர் சக்ரா ஆகும்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.