ETV Bharat / bharat

ட்ரம்ப் இந்தியா வருகை: வர்த்தக போர் முடிவுக்கு வருமா? - india

இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பது தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டுமென்று அமெரிக்கா பல முறை கூறியுள்ளது. பயங்கரவாதம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே உயர் மட்ட அளவில் ஒத்துழைப்பு உள்ளது

trumph
trumph
author img

By

Published : Feb 17, 2020, 10:35 PM IST

அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்பின் இந்திய வருகை, கடந்த ஒரு வருடமாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வரும் வர்த்தக போர் முடிவுக்கு வருமா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்திய வருகை குறித்து டிரம்ப் அறிவித்ததுமே, ஒரு பொதுவான சம்மதத்தின் அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும், பொருளதாரத்தை பாதுகாக்கும் தன்மை, வர்த்தக பிரச்னைகள் நிர்வாகத்தை இயக்குபவையாக இருந்தன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பாதுகாப்புத் துறையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்பட்சத்தில், வர்த்தக துறையில் இரு நாடுகளுமே முரண்பட்டு முட்டி மோதிக்கொள்கின்றன. பால் துறை, வேளாண் துறை, தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது.

சீனா, மெக்சிகோ, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள ட்ரம்ப், உலக வர்த்தக அமைப்பு போன்ற (World Trade Organisation) சர்வதேச வர்த்தக அமைப்புகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முக்கிய பங்காளி அமெரிக்கா ஆகும். கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே 182 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு வர்த்தகம் நடைபெற்றது. இரு நாடுகளுக்கிடையே வர்த்தகத்தில் உள்ள சுணக்கங்கள் தீர்க்கப்பட்டால், அடுத்த சில வருடங்களில் வர்த்தகம் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று சொல்வதில் தவறில்லை.

இரு நாடுகளுக்கிடையே வர்த்தக உறவு உயர கண்டிப்பாக ஒப்பந்தம் தேவை என்பது காலத்தின் கட்டாயம். இந்த பிரச்னையில் யதார்த்தமான அணுகுமுறையை கொண்டு சீனா பிரச்னையை தீர்த்துள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். இரு நாடுகளுக்கிடையே வர்த்தகத்தில் உள்ள பிரச்னைகளை தீர்க்க முடிந்தால் மட்டுமே பாதுகாப்புத் துறை இணைந்து செயல்படுவதிலும் கூடுதல் நன்மை ஏற்படும். இந்திய- பசிபிக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதும், டிரம்ப்பின் அஜண்டாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த வருடம் பென்டகன் ஆசியா -பசிபிக் என்ற பெயருக்கு பதிலாக இந்தோ- பசிபிக் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியது. இதனால், இந்தப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியாவுக்குள்ள முக்கியத்துவத்தை மறைமுகமாக அமெரிக்கா உணர்த்தியது.

இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகளுடன் இணைந்து இந்தியா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வது இந்த பிராந்தியத்தில் சீனா கொண்டிருக்கும் ஆதிக்க எண்ணத்தின் அடிப்படையில்தான். இந்த நான்கு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கடந்த ஆண்டு ஐ.நா. சபை மாநாட்டின்போது சந்தித்து பேசினர். அதோடு, புவிசார் ராணுவ பயிற்சிகளை இந்தப் பகுதியில் மேற்கொள்வது குறித்தும் விவாதித்தனர். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியான பிறகு, அமெரிக்காவின் செல்வாக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் சரிந்துள்ள நிலையில், சீனா தன் செல்வாக்கை சர்வதேச சமூகத்தில் ராணுவ ரீதியாகவும் பொருளதாரரீதியாகவும் பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு விரோதமான பல்வேறு கொள்கைகளை சீனா கொண்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது. ஐ.நா. சபையில் காஷ்மீர் குறித்து சீனா வெளியிட்ட கருத்துகள் இத்தகையை விரோத கொள்கைகளின் வெளிப்பாடே ஆகும். சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவுக்கு ராணுவ ரீதியிலான சவாலை அளிக்கவும் வாய்ப்புள்ளது. சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு சீனா வளர்ந்துள்ள நிலையில், அமெரிக்கா உள்பட பல நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக் கொள்வது இந்தியாவுக்கு பாதுகாப்பானது ஆகும். இதை சீனாவுக்கு எதிரான போக்கு என்று எடுத்துல்கொள்ள கூடாது. இந்தியாவுக்கு எதிரான விரோத போக்குக்கு ராஜதந்திரரீதியில் பதிலடி கொடுப்பது போன்றதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

சீனா தென்சீன கடலில் செயற்கை தீவுகளை ஏற்படுத்தி, தனது ராணுவ பலத்தை உலகுக்கு காட்டியுள்ளது சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பது போலாகும். சீனாவின் இத்தகைய ஆக்கிரமிப்பை அமெரிக்கா உடனடியாக எதிர்க்க வேண்டுமென்று கருதவில்லை. இதனால், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பங்கு முக்கியம் பெறுகிறது. இந்தியா- அமெரிக்க நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிவ் கூட்டுச் செயல்பாடுகள் மற்றும் தகவல் தொடர்புத் துறை. பாதுகாப்புத் துறைகளில் அதிகளவு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

கடந்த 12 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து 20 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு ராணுவத் தளவாடங்களை நாம் வாங்கியுள்ளோம். இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்புத் துறையில் ஆழமான உறவு ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. இந்தியா - அமெரிக்க நாடுகளுக்கிடையே உச்சி மாநாடு நடைபெறும்போதெல்லாம், பாகிஸ்தான் குறித்த பேச்சுவார்த்தையும் நிச்சயம் இடம்பெறும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் சம்மதித்தால், காஷ்மீர் விவாகரத்தில் மத்தியஸ்தம் செய்ய தாயாராக இருப்பதாக அடிக்கடி கூறியுள்ளார்.

ஆனால், பிரதமர் மோடியோ , காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடுகளின் மத்தியஸ்தம் தேவையில்லை என்று பதிலளித்துள்ளார். இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பது தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டுமென்று அமெரிக்கா பல முறை கூறியுள்ளது. பயங்கரவாதம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே உயர் மட்ட அளவில் ஒத்துழைப்பு உள்ளது. அது இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். பாகிஸ்தானுடன் தீவிரவாதம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியாவிடம் ட்ரம்ப் கேட்டுக் கொள்ளக்கூடும். பொதுவாக, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதிகள் பாகிஸ்தானுக்கும் ஒரு குறுகிய கால சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால், ட்ரம்ப் அவ்வாறு செல்லாதது அங்குள்ள சூழ்நிலை தன் சுற்றுப்பயணத்துக்கு உகந்ததாக இல்லை என்பதை பாகிஸ்தானுக்கு மறைமுகமாக உணர்த்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.