ETV Bharat / bharat

'மேற்கு வங்கத்தை குட்டி பாகிஸ்தானாக மாற்றிய மம்தா!' - மேற்கு வங்கம்

அகர்தலா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவரது தொண்டர்கள் சேர்ந்து அம்மாநிலத்தை குட்டி பாகிஸ்தானாக மாற்றியுள்ளதாக திரிபுரா பாஜக பெண்கள் பிரிவு தலைவர் பாபியா தத்தா தெரிவித்துள்ளார்.

mamata
author img

By

Published : Jun 14, 2019, 12:22 PM IST

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், அவர்களது தொண்டர்களும் மேற்கு வங்க மாநிலத்தை ஒரு குட்டி பாகிஸ்தானாக மாற்றியுள்ளனர். மேலும், மம்தாவுக்கு ராம் என்ற நாமமே ஒவ்வாமைக்குரியது. 'அது உண்மையின் அடையாளமாகும்' என திரிபுரா பாஜக பெண்கள் பிரிவு தலைவர் பாபியா தத்தா தெரிவித்தார்.

திரிபுராவின் பாஜக மஹிலா மோர்ச்சா பிரிவினர் நாடு தழுவிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நுாற்றுக்கணக்கான பெண்கள் சேர்ந்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஜெய் ஸ்ரீ ராம் என எழுதி அஞ்சல்அட்டை அனுப்பவுள்ளதாக தத்தா தெரிவித்தார்.

மேலும் அவர், 'மம்தா அவர்களே! நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டு பழகிக் கொள்ளுங்கள்' என கிண்டலாக கேட்டுக் கொண்டார்.

அண்மையில் மம்தா பானர்ஜி பாட்பாரா பகுதி வழியாக செல்லும்போது, அவரது வாகனத்திற்கு முன்பாக சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டதற்கு, அவர் காரில் இருந்து இறங்கி கோஷமிட்டவர்களை நோக்கி ஆவேசமாக சென்றார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.