நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி பிரசன் பானர்ஜி கால்பந்தை வைத்து சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தார்.
இதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், கால்பந்து ஆட்டத்தின் உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவும் ஒரு நாள் ஆட வேண்டும். அதற்கான முயற்சியை அமைக்க வேண்டும்.
நம் நாட்டில் உள்ள கால்பந்தாட்ட வீரர்களை சேர்த்துக் கொண்டு பிரதமரிடம் சென்று 'அரசியலோடு விளையாடாமல் கால்பந்தோடு விளையாடுவோம்' எனக் கூறுவோம் என்றார்.
முன்னாள் சர்வதேச கால்பந்து வீரரான இவர், இந்திய அணிக்காக விளையாடி 3 கோல்களை அடித்துள்ளார்.