ETV Bharat / bharat

தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - சன்னி வக்பு வாரியம் - அயோத்தி தீர்ப்பு

லக்னோ: அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என உத்தரப் பிரதேச மாநில சன்னி வக்பு வாரியத் தலைவர் ஷபர் ஃபருகி தெரிவித்துள்ளார்.

Sunni
author img

By

Published : Nov 9, 2019, 5:38 PM IST

அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்ப்பு இன்று வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பை இன்று வெளியிட்டது.

அதில், "சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்கு சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்திலேயே ஐந்து ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டது.

தீர்ப்பு குறித்து உத்தரப் பிரதேச மாநில சன்னி வக்பு வாரியத் தலைவர் ஷபர் ஃபருகி, "உச்ச நீதிமன்ற தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம். உத்தரப் பிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யாது" என்றார்.

Intro:Body:

Zafaryab Jilani, Alll India Muslim Personal Law Board: Respect the verdict but the judgement is not satisfactory. There should be no demonstration of any kind anywhere on it. #AyodhyaJudgment

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.