உலகை ஆட்டிப்படைத்துவரும் கோவிட்-19 தொற்றை ஏழு நாள்களில் குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்திருப்பதாகக் கூறி, கடந்த செவ்வாய்க்கிழமை பதஞ்சலி நிறுவனம் 'கரோனி' என்ற ஒரு ஆயுர்வேத மருந்தை வெளியிட்டது.
இருப்பினும், முறையான அனுமதி பெறாமல் வெளியிடப்பட்ட இந்த மருந்து குறித்த விளம்பரங்களை உடனே நிறுத்துமாறு பதஞ்சலி நிறுவனத்திற்கு ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கரோனாவை குணப்படுத்த முடியும் என்று பதஞ்சலி வெளியிட்ட போலி மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில், "பதஞ்சலி வெளியிட்டுள்ள கரோனி மருந்திற்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதா என்பதை ஜெய்ப்பூரிலுள்ள தேசிய மருந்துவ அறிவியல் நிறுவனம் கண்டுபிடிக்கும். போலி மருந்துகளை விற்பனை செய்ய மகாராஷ்டிர அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ராம்தேவ்விற்குத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
The National Institute of Medical Sciences, Jaipur will find out whether clinical trials of @PypAyurved's 'Coronil' were done at all. An abundant warning to @yogrishiramdev that Maharashtra won't allow sale of spurious medicines. #MaharashtraGovtCares#NoPlayingWithLives
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) June 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The National Institute of Medical Sciences, Jaipur will find out whether clinical trials of @PypAyurved's 'Coronil' were done at all. An abundant warning to @yogrishiramdev that Maharashtra won't allow sale of spurious medicines. #MaharashtraGovtCares#NoPlayingWithLives
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) June 24, 2020The National Institute of Medical Sciences, Jaipur will find out whether clinical trials of @PypAyurved's 'Coronil' were done at all. An abundant warning to @yogrishiramdev that Maharashtra won't allow sale of spurious medicines. #MaharashtraGovtCares#NoPlayingWithLives
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) June 24, 2020
அனில் தேஷ்முக் தனது மற்றொரு ட்வீட்டில், "மருத்துவச் சோதனைகள், மாதிரி அளவு குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்ளாமலும், முறையான அனுமதி பெறாமலும் கரோனாவைக் குணப்படுத்த மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக உரிமைகோருவது தவறானது.
இதுபோன்ற விளம்பரங்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் தடைவிதித்துள்ளது வரவேற்கத்தக்கது. பொது சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
-
Claims of a cure for Corona without sharing clinical trials, sample size details,registration with authorities can't be acceptable. Its great that @moayush banned such advt. There can be no compromise with public health & well-being at all!
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) June 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Claims of a cure for Corona without sharing clinical trials, sample size details,registration with authorities can't be acceptable. Its great that @moayush banned such advt. There can be no compromise with public health & well-being at all!
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) June 24, 2020Claims of a cure for Corona without sharing clinical trials, sample size details,registration with authorities can't be acceptable. Its great that @moayush banned such advt. There can be no compromise with public health & well-being at all!
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) June 24, 2020
முன்னதாக, பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட மருந்துகள் குறித்த விளம்பரங்களை நிறுத்த உத்தரவிட்ட ஆயுஷ் அமைச்சகம், பதஞ்சலி நிறுவனம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனைகள் குறித்த தரவுகளை அளிக்கமாறும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பதஞ்சலியின் புதிய மருந்து குறித்த விவரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது - ஆயுஷ் அமைச்சகம்