ETV Bharat / bharat

மருத்துவமனை விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவு பின்பற்றப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: மருத்துவமனையில் டெல்லி வாழ் மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உத்தரவை ஆளுநர் ரத்து செய்த நிலையில், இவ்விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவு பின்பற்றப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
author img

By

Published : Jun 10, 2020, 3:50 PM IST

டெல்லி அரசுக்கு கீழ் இயங்கிவரும் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் உரிய ஆவணங்களையுடைய டெல்லி வாழ் மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும் என டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இதனை ரத்து செய்து டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாஸ் உத்தரவு பிறப்பித்தார். இருவேறு உத்தரவில் எதனை பின்பற்றுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஆளுநரின் உத்தரவு பின்பற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அரசியல் செய்வதற்கான காலம் இதுவல்ல. சட்டப்பேரவைத் தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றினோம். மத்திய அரசு ஒரு முடிவை எடுத்துவிட்டது. மாற்றுக் கருத்தை தெரிவிப்பதற்கான காலம் இதுவல்ல. இந்த விஷயத்தில் துணை நிலை ஆளுநரின் உத்தரவே அமல்படுத்தப்படும்.

இதில் விவாதம் செய்தவற்கு ஒன்றுமில்லை. அரசியல் கட்சிகள் மோதிக் கொண்டால், கரோனா வென்றுவிடும். இந்தப் போரில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாங்கள் இருக்கும் நெருக்கடியை எவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஜூலை மாத இறுதிக்குள் 5.5 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என அரசு கணித்துள்ளது. அதற்கேற்ப படுக்கை வசதிகளை தயார் செய்து தருவது சவாலாக இருக்கும். மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்றார்.

கரோனா வைரஸ் நோயால் டெல்லியில் இதுவரை 31,309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 905 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.