மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து நாட்டின் பொருளாதாரம் குறித்து பேசினார். அப்போது, ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்கள் குறித்து விவரித்தார்.
ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு அறிவித்த திட்டங்கள்:
- குறிப்பிட்ட விவசாய பொருட்களின் ஏற்றுமதி செலவை குறைப்பதற்காக போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விவசாய ஏற்றுமதி திட்டம் அமல்படுத்தப்பட்டது.
- சுலபமாக வர்த்தகம் மேற்கொள்வதற்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 142ஆவது இடத்திலிருந்து 77ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- வட்டி சமன்பாட்டு திட்டத்தால் வட்டிவிகிதம் மூன்றிலிருந்து ஐந்தாக உயர்த்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வணிக ஏற்றுமதியாளர்கள் பயனடைகிறார்கள்.
- இந்த திட்டங்களுக்கு அமைச்சர்களுக்கு இடையேயான குழு பொறுப்பேற்கும்.