ETV Bharat / bharat

தொழிலாளர்களின் இன்னல்கள் மத்திய அரசிற்கு சென்றடைய செய்வோம் - ராகுல் காந்தி - மத்திய அரசு

டெல்லி: வெளிமாநில தொழிலாளர்கள் படும் இன்னல்கள் மத்திய அரசிற்கு சென்றடைவதை காங்கிரஸ் கட்சி உறுதி செய்யும் என்று அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : May 15, 2020, 8:02 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஊரடங்கால் பொதுபோக்குவரத்து முடங்கியுள்ளதால், வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதற்கு தீர்வுகாணும் வகையில் மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கினாலும் அதற்கு அதிகப்படியாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊரடங்கினால் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகளவில் பாதிகப்பட்டுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்லவும் தொடங்கினர். இதன் காரணமாக, நாடு முழுவதும் இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் இறந்துள்ளனர்.

இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் படும் அவலங்கள் குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "அடர்த்தியான இருள் சூழந்துள்ள இந்த கடினமான நேரத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக நாம் அனைவரும் ஒன்றுமையுடன் துணை நிற்போம். அவர்களின் இன்னல்களை மத்திய அரசிற்கு சென்றடைய காங்கிரஸ் உதவி செய்யும். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. நாட்டின் சுய மரியாதையின் கொடியை ஏந்தியவர்கள். அவர்களை ஒருபோதும் வீழ விடமாட்டோம்" எனக் கூறியுள்ளார்.

  • अंधकार घना है कठिन घड़ी है, हिम्मत रखिए-हम इन सभी की सुरक्षा में खड़े हैं। सरकार तक इनकी चीखें पहुँचा के रहेंगे, इनके हक़ की हर मदद दिला के रहेंगे। देश की साधारण जनता नहीं, ये तो देश के स्वाभिमान का ध्वज हैं... इसे कभी भी झुकने नहीं देंगे। pic.twitter.com/bBf48DiluY

    — Rahul Gandhi (@RahulGandhi) May 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த ட்வீட்டில் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் காணொலியையும் இணைத்துள்ளார்.

இதையும் பார்க்க: விருதுநகரில் 6 வகையான தொழிற்சாலைகள் இயங்க முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.