ஓ.பி. ஜிந்தால் சர்வதேச பல்கலைக்கழகம், ஐ.ஐ.எஃப். கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் கருத்தரங்கு ஒன்றை மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியால் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் கல்வி நிலை, புதிய கல்விக் கொள்கை குறித்து தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசியதாவது, ”ஒரு நாடு, ஒரு டிஜிட்டல் தளம் மூலம் நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள மாணவர்களுக்கு கல்வியைக் கொண்டுசேர்க்க அரசு தயாராக உள்ளது. இந்திய கல்வி நிறுவனங்கள் கோவிட்- 19 பெருந்தொற்றை எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது.
உயர் கல்வி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அறிவியல், விஞ்ஞானம், ஆராய்ச்சி, பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பெரும்பணியை ஆற்றிவருகின்றன. சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்தியாவின் கல்வித்தரத்தை உயர்த்துவதே மத்திய அரசின் நோக்கம். நாட்டின் 33 கோடி மாணவர்களுக்கும் கல்வி சென்றடைவதை புதிய கல்விக் கொள்கை உறுதிசெய்யும்” என்றார்.
இதையும் படிங்க: 'கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவியது' - ஒப்புக்கொண்ட இந்தியா