ETV Bharat / bharat

வீட்டிற்குள் மனிதர்கள்: விடுதலையாகும் விலங்குகள்! - wild-animals-are-enjoying-lockdown

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், வன விலங்குகள் சுதந்திரமாக தங்கள் இருப்பிடங்களைத் தாண்டி வெளியே வந்து உலாவிக்கொண்டிருக்கின்றன.

author img

By

Published : Apr 14, 2020, 11:10 AM IST

கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் காட்டு விலங்குகள் தங்கள் வாழ்விடங்களைத் தாண்டி வெளியே வந்து உற்சாகமாகச் சுற்றித் திரிகின்றன.

கர்நாடகாவில் காடுகளை ஒட்டிய இடங்களில், குறிப்பாக கோடகு மாவட்டத்தில், யானைகள் சாலைகளில் மகிழ்ச்சியாக நடந்து செல்வதைக் காணமுடிகிறது. அதேபோல புள்ளி மான்களும், சாம்பார் மான்களும் சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிவதையும் காணமுடிகிறது.

இது குறித்து கர்நாடக மாநிலத்தின் வனத்துறை அலுவலர் சஞ்சய் மோகன் கூறுகையில், "சுற்றுப்புறம் அமைதியாக மாறும்போது காட்டு விலங்குகளின் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், காட்டு விலங்குகள் தங்கள் இருப்பிடங்களைத் தாண்டியும் வெளியே சுற்றி வருகின்றன.

சாலையில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் மனித நடமாட்டம் காரணமாக, வன விலங்குகள் ஒருபோதும் தங்கள் இருப்பிடத்தைத் தாண்டி வெளியே வருவதில்லை. ஆனால் இப்போது, வெளியே வந்து 'என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிய மான் போன்ற விலங்குளை வெளிய வரத்தொடங்கியுள்ளன

யானைகள் ஏற்கனவே காடுகளை விட்டு வெளியேவர பழகிவிட்டன. இப்போதுள்ள அமைதியான சூழலில், அவை சாலைகளில் மகிழ்ச்சியாக உலாவருகின்றன. வாகனங்கள் இல்லாததால் வன விலங்குகள் வெளியே வருகின்றன" என்றார்.

விலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது குறித்தப் பேசிய அவர், "இதனால் சட்டத்துக்குப் புறம்பாக வேட்டையாடுபவர்களின் எளிய இலக்காக வன விலங்குகள் மாறுகின்றன. இந்த காலக்கட்டத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க, இரவு ரோந்துப் பணிகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம்" என்று கூறினார்.

உயிரியல் பூங்காக்களில் பின்பற்றப்படும் நடமுறைகள் குறித்து பேசிய அவர், "பூங்காக்களில் விலங்குகளை பராமரிப்பவர்கள் கோவிட்-19 பரவலையடுத்து முகமூடிகள், கையுறைகள் அணிவது போன்ற பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது பூங்காக்களில், முன்பிருந்தே இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றப்பட்டுவந்தது. இப்போது அவை கண்டிப்பாக்கப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பல்லாரி என்ற இடத்தில் கரடி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தேவையான இடங்களில் கூண்டுகளை வைக்கிறோம். அதில் சிறுத்தை போன்ற விலங்குகள் பிடிபடுகின்றன" என்று கூறினார்.

கர்நாடகாவில் 6,000க்கும் மேற்பட்ட யானைகளும், 2,500க்கும் மேற்பட்ட சிறுத்தைகளும், 500 புலிகளும், 600 முதல் 700 சிங்க வால் குரங்குகளும் வசிப்பதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவிட்-19 பாதிப்பிலிருந்து கேரளா முழுவதுமாக விடுபடவில்லை: சுகாதாரத் துறை அமைச்சர் கவலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.