புதுச்சேரி அடுத்த பிச்சவீரன்பேட் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (29). இவருக்கும் கொம்பாக்கம்பேட் பகுதியைச் சேர்ந்த காவலர் சண்முகத்திற்கும் 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு குழந்தை பெறுவதற்காகத் தாய் வீட்டிற்கு கவிதா சென்றார். தற்போது கவின் என்ற நான்கு வயது ஆண் குழந்தை உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விட்டுச் சென்ற சண்முகம் மீண்டும் அவரை வீட்டிற்கு அழைக்கவில்லை.
இதுதொடர்பாக கவிதா குடும்பத்தினர் சண்முகத்திடம் கேட்டபோது, எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டார்.
இதனால் மனமுடைந்த கவிதா தனது மகன், தாய், அண்ணன் ஆகியோருடன் டிஜிபி அலுவலகம் வாயில் முன்பு கணவர் சண்முகம், அவருக்கு ஆதரவாக உள்ள அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த பெரிய கடை காவல்துறையினர், கவிதாவை சமாதானப்படுத்தி டிஜிபி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பாரம்பரியமிக்க நவராத்திரி விழாவை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்!