குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மத்தியப் பிரதேசத்தில் பேரணி நடந்தது. 'அரசியலமைப்பு, நாட்டை பாதுகாப்போம்' என்ற கருப்பொருளில் அந்தப் பேரணி நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கலந்துகொண்டார்.
அப்போது, அட்னன் சமிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்ததைக் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் பேசியதாவது, “பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட கலைஞர் அட்னன் சமிக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்து கௌரவித்துள்ளது.
இவருக்கு நரேந்திர மோடி அரசு குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது. சமியின் தந்தை பாகிஸ்தான் விமானப் படையில் பணியாற்றியவர். இந்தியாவின் மீது குண்டுகளை வீசியவர்.
அவரின் மகனுக்கு நரேந்திர மோடி அரசு குடியுரிமையும், பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கிறது. ஆனால் நாட்டுக்காக போராடியவரின் மகன் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அஸாமிலுள்ள தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுதான் நரேந்திர மோடி அரசின் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம்” என்றார்.
2015ஆம் ஆண்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்த அட்னன் சமிக்கு, 2016ஆம் ஆண்டு குடியுரிமை வழங்கப்பட்டது. சமீபத்தில் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அட்னன் சமியும் ஒருவராவார்.
இதையும் படிங்க : 'ஆபரேஷன் ஸ்மைல்' - தெலங்கானாவில் 3,600 குழந்தைகள் மீட்பு