டெல்லியில் தப்லிக் இஸ்லாமிய மத மாநாடு நடத்த அனுமதியளித்தது யார் என கேள்வியெழுப்பியுள்ள சரத் பவார், இதுபோன்ற மாநாட்டுக்கு மகாராஷ்டிராவில் அனுமதி மறுக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், “மகாராஷ்டிராவில் மும்பைக்கு அருகிலும், சோலாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு பெரிய கூட்டத்திற்கும் அனுமதிகோரப்பட்டது.
மும்பை அருகே அனுமதிகோரப்பட்ட கூட்டத்திற்கு முன்கூட்டியே அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல், நிபந்தனைகளை மீறுவதாக சோலார்பூர் கூட்டத்திற்கு எதிராகவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
'மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இத்தகைய முடிவை எடுத்தனர். ஆனால் டெல்லியில் இதேபோன்ற ஒரு கூட்டத்திற்கு ஏன் அனுமதி மறுக்கப்படவில்லை, அதற்கு யார் ஒப்புதல் அளித்தனர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நிஜாமுதீன் நிகழ்வு குறித்து ஊடகங்கள் அதை மிகைப்படுத்த வேண்டியது ஏன்? இது தேவையற்ற முறையில் நாட்டின் ஒரு சமூகத்தை குறிவைக்கும் செயல்,' என்றும் அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 400 பேரும், உயிரிழந்த 15 பேரும் தப்லிக் ஜமாஅத் இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். இந்த மாநாட்டில் ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் என்று கூறப்படுகிறது.