ETV Bharat / bharat

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தரும் இந்திய ஊடகம்

சுகாதாரம் குறித்த செய்திகளை மக்கள் வாசிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது. ஊடகத்தினரை தனியாக தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டால், சுகாதாரம் குறித்த செய்திகளை விற்பது கடினம் என்ற பதிலே உங்களுக்கு கிடைத்திருக்கும். சுகாதாரம் குறித்த செய்திகள் இடம்பெறும் பகுதியில் விளம்பரத்தை இடம்பெற செய்தால் அதற்கு பணமாவது கிடைக்கும் என செய்தியாளர்கள் கூறுவார்கள்.

news
news
author img

By

Published : Apr 16, 2020, 7:04 PM IST

சுகாதாரத்திற்கு இந்திய ஊடகம் அதிக முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்த்தி தார் கூறியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை காண்போம்...

கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்துவருகிறது. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதற்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. ஆனால், இது புது விதமான மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக, சுகாதாரத்திற்கு இந்திய ஊடகம் அதிக முக்கியத்துவம் தந்துவருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் குறித்த செய்தி அதிகமாக வெளிவரத் தொடங்கியுள்ளது.

பத்திரிகைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கான தலையங்கம் எழுதப்பட்டது. வானொலி, தொலைக்காட்சிகளில் அவர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது அனைவரிடத்திலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. சுகாதாரத்திற்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் தந்ததில்லை. சுகாதாரம் குறித்த செய்தி அரிதாகவே வெளியானது. ஊடகத்தில் பணிபுரிந்த காரணத்தாலும் பத்தாண்டுகளாக பொது சுகாதாரம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதாலும் சுகாதாரம் குறித்த செய்திகளை வெளியிடுவது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும்.

சுகாதாரம் குறித்த செய்திகளுக்கு யாரும் விளம்பரம் அளிக்க முன்வரமாட்டார்கள். சுகாதாரம் குறித்த செய்திகளை காட்டிலும் அரசியல், குற்றம் குறித்த செய்திகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தருவதுண்டு. நெருக்கடி காலத்தில் மட்டும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. உயிரிழப்பு சம்பவம் அதிகம் நிகழ்ந்தாலும் பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டாலும் செய்திகளாக வெளியானது.

கரோனா வைரஸ் நோய்க்கு 2003ஆம் ஆண்டு சார்ஸ், 2005ஆம் ஆண்டு H1N1, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவத் தொடங்கியபோது ஊடகம் அதற்கு அதிக முக்கியத்துவம் தந்தது. அப்போதும் கூட சுகாதாரப் பணியாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை. உயிரிழப்பு, சுகாதாரத்துறையின் தோல்வி போன்றவையே பெரும்பாலும் செய்திகளாக வெளியானது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவைக்கு பத்திரிகை அதிக முக்கியத்துவம் தந்தது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு தனியார் மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் ஆகியவையே விளம்பரம் அளித்தது.

சுகாதாரத்திற்கான பிரத்யேக செய்தியாளர்கள், முன்னணி பத்திரிகைகளில் மட்டுமே உள்ளனர். சுகாதாரம் குறித்த செய்திகளை மக்கள் வாசிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது. ஊடகத்தினரை தனியாக தொடர்பு கொண்டு இதுகுறித்து நீங்கள் கேட்டிருந்தால், சுகாதாரம் குறித்த செய்திகளை விற்பது கடினம் என்ற பதிலே உங்களுக்கு கிடைத்திருக்கும். சுகாதாரம் குறித்த செய்திகள் இடம்பெறும் பகுதியில் விளம்பரத்தை இடம்பெற செய்தால் அதற்கு பணமாவது கிடைக்கும் என செய்தியாளர்கள் கூறுவார்கள்.

சுகாதாரப் பணியாளர்கள் குறித்த விவாதம் எழுந்தால், ஊதியத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கான பணியை மேற்கொள்கிறார்கள் போன்ற கருத்துக்கள் கூறுவதுண்டு. மருத்துவத் துறை தொழில்நுட்ப கலைஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை எனில் அவர்கள் குறித்த செய்தி வெளியாகாது. பத்திரிகைகளின் காலி இடங்களை நிரப்புவதற்காகவே சுகாதாரம் குறித்த செய்திகள் வெளியாகும். இந்த முறை சுகாதாரப் பணியாளர்கள் கடவுளுக்கு இணையாக போற்றப்படுகின்றனர்.

ஊதியத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கான பணியை மேற்கொள்கிறார்கள் போன்ற கருத்தை தெரிவித்தவர்களே தற்போது இதுபோன்ற கருத்தை கூறுகிறார்கள். காச நோய், எய்ட்ஸ், சார்ஸ், H1N1 போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது கூட மருத்துவர்களுக்கு இதுபோன்ற பாராட்டு கிடைக்கவில்லை. இதுபோன்ற பேரிடர் காலத்திலாவது சுகாதாரத்திற்கான முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புவோமாக. இனியாவது சுகாதாரத்திற்கு ஊடகம் அதிக முக்கியத்துவம் தரட்டும். இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க: ஊரடங்கால் ஏற்படும் நன்மைகள் - பரப்புரையில் கேரள கல்லூரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.