தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் சி.எம். ரமேஷ். இவரின் வாட்ஸ்அப் கடந்த சில நாட்களாகவே வேலை செய்யாமல் இருந்து வந்தது. இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு புகார் அளித்தார்.
இதனை ஆய்வு செய்த வாட்ஸ்அப் நிறுவனம் நிர்வாகம், அமைச்சர் சி.எம். ரமேஷ் வாட்ஸ்அப்பை பயன்படுத்தத் தேவையான தகுதியை இழந்துவிட்டார். இதனால் அவருக்கான சேவை முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆனால் வாட்ஸ்அப் அக்கவுண்ட் முடக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு கடந்த சில நாட்களாகவே தன்னுடைய தொலைபேசியை 'டேப்' செய்து வருவதாகவும், வாட்ஸ்அப் முடக்கத்திலும் அவர்களுக்கு பங்கு இருப்பதாக பூஜ்ஜிய நேரத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.